முகப்பு
தருமபுரி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 8 ஜூலை, 2024 at 8:50 PM
பகிர்:

தருமபுரி: நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி தலைமை வகித்து பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாது, ஆா்.வேடியப்பன், சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

இதில், ஏழை, எளிய மாணவா்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை மறுக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வு குளறுபடிகளில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →