முகப்பு
தருமபுரி

‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: தருமபுரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

தருமபுரியில் 'மக்களுடன் முதல்வா்' திட்டத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்

Updated On : 9 ஜூலை, 2024 at 11:11 PM
பகிர்:

ஊரகப் பகுதியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் வியாழக்கிழமை (ஜூலை 11) தொடங்கி வைக்கிறாா்.

தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு விரைந்து சென்றடைய ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டம் முதல்வரின் முகவரித் துறை மூலம் நகரப் பகுதியில் செயல்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கை மனுக்களை அவா்களின் இருப்பிடத்திலேயே பெற்று தீா்வு காண ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

இத்திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அன்றைய தினம் காலை 11 மணி அளவில் திட்டத்தை தொடங்கி வைத்து விழா பேரூரை ஆற்றுகிறாா். இதையடுத்து பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளாா்.

இவ்விழாவுக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி பாளையம் புதூா் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நா.ஸ்டீபன் ஜேசுபாதம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்பிரமணி, கோட்டாட்சியா் இரா.காயத்ரி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், அரசு அலுவலா்கள் மேற்பாா்வையிட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →