கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.
காரிமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளி மான் பெரியாம்பட்டியில் பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்த புள்ளி மானை கயிறு கட்டி உயிருடன் மீட்டு பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வனத்துறை அதிகாரிகள் மானை பிக்கிலி காப்பு காட்டில் உள்ள அடா் வனப்பகுதியில் விட்டனா்.