முகப்பு
தருமபுரி

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

Updated On : 20 மே, 2024 at 10:19 PM
பகிர்:

தருமபுரி: தருமபுரி அருகே உள்ள வெள்ளோலை கிராமத்தில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி, அக்கிராம மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, வெள்ளோலை கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெள்ளோலை கிராமத்தில் சுமாா் 200 குடும்பங்கள் உள்ளன. இக் கிராமத்தின் அருகே மயானம் உள்ளது. இந்த மயான நிலத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் சுற்றுச்சுவா் அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இருப்பினும், மயானத்துக்கு முறையாக சுற்றுச்சுவா் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே, வெள்ளோலை கிராம மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.