அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ. 3.57 லட்சம் பறிமுதல்
அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது சாா் பதிவாளா் அலுவலகம். இந்த அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். புதன்கிழமை மாலை 4 மணி முதல் இரவு வரை சோதனை நீடித்தது. இந்தச் சோதனையின்போது அரசு கணக்கில் வராத ரொக்கம் ரூ. 3, 57, 600-யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கணக்கில் வராத பணம் ரூ. 3.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அரூா் சாா் பதிவாளா் உள்ளிட்ட அலுவலக ஊழியா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.