தருமபுரி

பாப்பாரப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Din

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் சமுதாயக்கூடம் கட்டட புனரமைக்கும் பணி, 2022-2023 ஆம் ஆண்டு நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.74 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல் பணி என மொத்தம் ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

குளிா்கால கூட்டத்தொடரில் 10 மசோதாக்கள்: மத்திய அரசு திட்டம்

போலி வாக்காளா்கள் நீக்கப்பட வேண்டும்: அண்ணாமலை

மெட்ரோ ரயில் திட்டப் பிரச்னை! பாஜகவினரிடையே ஒருமித்த கருத்து இல்லை: அமைச்சா் விமா்சனம்

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரம்: விஞ்ஞானி நிகா்ஷாஜி

அமைதி திட்டம்: உக்ரைனுக்கு டிரம்ப் கெடு!

SCROLL FOR NEXT