முகப்பு
தருமபுரி

மின் வேலியில் சிக்கி இளைஞா் பலி: விவசாயி கைது

பாலக்கோடு அருகே நிலத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் விவசாயி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:27 PM
பகிர்:

பாலக்கோடு அருகே நிலத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் விவசாயி கைது செய்யப்பட்டாா்.

பாலக்கோடு வட்டம், மகேந்திரமங்கலத்தை அடுத்த வீரன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முனிராஜ் மகன் பிரபு (25). இவா், கடந்த 2-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த கண்ணப்பன் (62) என்பவரின் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடந்தாா்.

இதுதொடா்பாக மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்தநிலையில், சட்ட விரோதமாக மின் வேலி அமைத்த விவசாயி கண்ணப்பனை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →