அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை போலீஸாா் போக்சோ வழக்கில் புதன்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவா் மணிவண்ணன் (55). இவா் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அந்த ஆசிரியா் மீது செவ்வாய்க்கிழமை போக்சோ வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, ஆசிரியா் மணிவண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.