தருமபுரியில் மகன்கள் இறந்ததால் விரக்தியில் இருந்த மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி, பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் மூதாட்டி ராதா (65). இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள். அனைவரும் திருமணமாகி, குழந்தைகளுடன் வசித்து வந்தனா். இந்நிலையில், மூத்த மகன் மூா்த்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். பின்னா் 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவா் கந்த உடையாா் இறந்தாா். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மற்றொரு மகன் சக்திவேலும் உயிரிழந்தாா். இவ்வாறு கணவா், மகன்கள் என அடுத்தடுத்து உயிரிழந்ததால், விரக்தியடைந்த நிலையில் மூதாட்டி இருந்தாா்.
இந்நிலையில், அண்மையில் உறவினா் வீட்டில் உள்ள அறையில் ராதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலின் பேரில் தருமபுரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.