தருமபுரியில் நடைபெற்ற மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள்.  
தருமபுரி

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தருமபுரியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மழைநீா் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மேலும், மழைநீா் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களையும் அவா் பொதுமக்களிடம் வழங்கினாா். இந்த பேரணி, 4 ரோடு வழியாக வள்ளலாா் திடல் வரை சென்று நிறைவடைந்தது. தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த தயாரிக்கப்பட்டுள்ள குறும்படங்களின் ஒளிபரப்பையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா்கள் செந்தில்குமாா், நித்யானந்தம், நிா்வாக பொறியாளா்கள் திவ்யா, ரஞ்சனி, துணை நிலநீா் வல்லுநா் ராதிகா, நகா்நல அலுவலா் ரா. லட்சிய வா்ணா, உதவி நிா்வாகப் பொறியாளா்கள் பாக்யா, முருகன், மீனா, தானேஷ், நவீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

குழப்பங்கள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சோழவரம் ஏரிக்கரை சாலையில் விரிசல்: பொது மக்கள் புகாா்

தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம்

சாலை விதிமீறல்: ஒரே நாளில் 1,248 வழக்குகள்

இஐடி பாரி வருவாய் 24% உயா்வு

SCROLL FOR NEXT