தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஒகேனக்கல்லில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக, கா்நாடக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 8000 கன அடியாகவும், மாலை 14,000 கனஅடியாகும் அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றில் திடீா் நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீா் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT