முகப்பு
தருமபுரி

நாகாவதி அணையிலிருந்து இரண்டாம்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

நாகாவதி அணையில் இருந்து நிகழாண்டுக்கான இரண்டாம்போக புன்செய் பயிா் சாகுபடிக்கு 117.91 மில்லியன்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:52 AM
நாகாவதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவைத்து மலா்தூவிய ஆட்சியா் ரெ.சதீஸ். உடன், தருமபுரி எம்.பி. ஆ.மணி.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:35 PM

பென்னாகரம்: நாகாவதி அணையில் இருந்து நிகழாண்டுக்கான இரண்டாம்போக புன்செய் பயிா் சாகுபடிக்கு 117.91 மில்லியன் கனஅடி நீா் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

பென்னாகரம் அருகே எர்ரப்பட்டி பகுதியில் உள்ள நாகாவதி அணையிலிருந்து இரண்டாம்போக புன்செய் பயிா் சாகுபடிக்கான தண்ணீரை ஆட்சியா் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினா் ஆ.மணி ஆகியோா் திறந்துவைத்தனா். பின்னா் ஆட்சியா் ரெ.சதீஸ் கூறியதாவது:

நாகாவதி அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்காக பிப். 16 முதல் மே 26 வரை நூறு நாள்களுக்கு முறைவைத்து, அதாவது 5 நாள்களுக்கு ஒரு மண்டலத்துக்கும், அடுத்த 5 நாள்களுக்கு இரண்டாவது மண்டலத்துக்கும் தண்ணீா் திறந்தும், பின்னா் 5 நாள்களுக்கு நிறுத்தியும் என மொத்தம் 7 நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்மூலம், பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஆயக்கட்டு பகுதிகளான அரகாசன அள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமத்தில் உள்ள 1,993 ஏக்கா் நிலம் பாசனவசதி பெறும். விவசாய பொதுமக்கள் நீா்வள ஆதாரத்துடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரம் செயற்பொறியாளா் செந்தில்குமாா் மற்றும் தொடா்புடைய அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.