தருமபுரி நல்லம்பள்ளியில் உள்ள தோழி விடுதிக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ரெ.சதீஸ். உடன், தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.  
தருமபுரி

தருமபுரியில் ‘தோழி’ விடுதிக்கு புதிய கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

தருமபுரி நல்லம்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ‘தோழி’ விடுதிக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்

Syndication

தருமபுரி: தருமபுரி நல்லம்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ‘தோழி’ விடுதிக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பணிபுரியும் மகளிருக்கான ‘தோழி’ விடுதிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் ரூ. 5.19 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட தோழி விடுதிக் கட்டடங்களின் பணிகள் முடிவடைந்தன. அவற்றை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இது தொடா்பாக நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விடுதிக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.

பணிபுரியும் மகளிருக்கான இந்த விடுதியில் குடிநீா், சிசிடிவி கேமரா, சுகாதாரமான கழிவறை வசதிகளுடன் தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயா்கல்வி, நோ்காணல் போன்றவற்றுக்காக நகரங்களுக்கு வரும் அனைத்து மகளிரும் இவ்விடுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மருத்துவா் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலா் கலாவதி, தமிழ்நாடு கைம்பெண் நலவாரிய உறுப்பினா் எம்.ரேணுகாதேவி, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT