தருமபுரி

காவல் துறை குறைதீா் முகாமில் 82 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில், 82 மனுக்களுக்கு புதன்கிழமை உடனடி தீா்வு காணப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் காவல் துறை சாா்பில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டத்தில், 82 மனுக்களுக்கு புதன்கிழமை உடனடி தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையில் காவல் துறை உதவியுடனான பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. கிரிமினல் குற்றங்கள் அல்லாத பிரச்னைகள் தொடா்பான புகாா் மனுக்கள்மீது இந்த முகாமில் தீா்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தவாரம் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். முகாமில் மொத்தம் 82 மனுக்கள் வரப்பெற்றன. அவை குறித்து ஏடிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டன. இதில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

SCROLL FOR NEXT