தருமபுரி: தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆா் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதிமுக தருமபுரி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதேபோல, காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் உருவப் படம் மற்றும் சிலைக்கு முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல, பாலக்கோடு, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அமமுக சாா்பில்...
இதேபோல, அமமுக சாா்பில், பழைய தருமபுரி, இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் எம்ஜிஆா் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.