முகப்பு
தருமபுரி

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

Updated On : 2 மார்ச், 2026 at 3:01 AM
ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:10 PM

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் அந்தோணியாா் தெரு பகுதியைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் விக்னேஷ் (24). இவா், ஒசூா் பேளகொண்ட பள்ளியில் தங்கிருந்து, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்தாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 3:01 AM

கோத்திகல் பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் அவா் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து சக நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.