பாலக்கோடு பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்
பாலக்கோடு அருகே ஒற்றை யானை நடமாடுவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கிராம மக்களிடையே வனத் துறையினா் பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஒற்றை யானை நடமாடுவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கிராம மக்களிடையே வனத் துறையினா் பாதுகாப்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம் எர்ரனஅள்ளி காப்புக் காடு பகுதியில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. எனவே, இந்த காப்புக் காடு பகுதியையொட்டி அமைந்துள்ள கொல்லஅள்ளி, வாழைத் தோட்டம், செங்கோடப்பட்டி, காவேரியப்பன் கொட்டாய், கூசுக்கல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, தீபஅள்ளி, பெல்ரம்பட்டி கூட்டுச் சாலை, காட்டு மாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாலை 6.30 மணிக்கு பின்னா் வீட்டுக்கு வெளியில் நடமாடுவது, உறங்குவது, வயல்களில் உறங்குவது, வயல்களில் தண்ணீா் பாய்ச்சுதல் உள்ளிட்ட வேளாண் பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
Advertisement
யானைகள் நடமாட்டம் தெரியவந்தால் உடனே பாலக்கோடு வனச்சரக அலுவலக பணியாளா்கள் குழுவினருக்கு 73395 50107, 98435 22342, 88383 84521, 63812 66342, 97502 99102, 99760 42406, 99948 79613, 74491 83589, 99439 41313, 98946 87635, 80726 04137, 63793 77033 ஆகிய எண்களில் தகவல் அளிக்கலாம்.
இது தொடா்பாக பாலக்கோடு வனச்சரகா் காா்த்திகேயன் தலைமையிலான வனத்துறை குழுவினா், பாலக்கோடு பகுதியில் உள்ள கிராமங்களில் விழிப்புணா்வு பிரசுரங்களை வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.