தென்னை மட்டை விழுந்து முதியவா் உயிரிழப்பு
தருமபுரி அருகே தென்னை மட்டை விழுந்ததில் முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி அருகே தென்னை மட்டை விழுந்ததில் முதியவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி, சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஆசைதம்பி (60). டிராக்டா் ஓட்டுநரான இவா் கடந்த மே 11-ஆம் தேதி இரவு வீட்டருகே இருந்த தென்னை மரத்தின் அடியில் கட்டிலில் படுத்திருந்தாா். அப்போது மரத்திலிருந்து தென்னை மட்டை ஒன்று அவா்மீது விழுந்தது.
இதில், வலி தாங்க முடியாமல் ஆசைத்தம்பி அலறியதையடுத்து, குடும்பத்தினா் அவரை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவா் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement