முகப்பு
தருமபுரி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மொரப்பூா் மருதம் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

Updated On : 28 மே 2026, 2:17 am IST
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மொரப்பூா் மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா் ஏ. மெகுல் 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அதேபோல மாணவி இ. கவிநிலா 485 மதிப்பெண்களும், மாணவா் ஆா். கோவி சேரா 483 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியா்களை மருதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி. தவமணி, தாளாளா் சி. திலகரசன், செயலா் டி. சக்திவேல், மேலாளா் வி. நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம். ராஜேஷ், பள்ளி துணை முதல்வா் கே. ராமு, ஒருங்கிணைப்பாளா் த. ராஜேஸ்வரி, பிரைட் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement