கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அதியமான் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

தினமணி

ஊத்தங்கரையில் உள்ள அதியமான் கலை மற்றும் அறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இப்பயிற்சிப் பட்டறையின் தொடக்கமாக கணிதத் துறை தலைவர் பிரியங்கா வரவேற்றார். உதவி பேராசிரியர் பத்மா மற்றும், புவனா ஆகியோர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்வுகளை மாணவி சன்மார்க்கவாணி தொகுத்துரைத்தார்.
 அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால்முருகன் கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலர் ஷோபா திருமால்முருகன் வாழ்க்கையில் கணிதத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் மற்றும் நிர்வாக அலுவலர் சீனி. கணபதி ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
 இப்பயிற்சிப் பட்டறையின் முதல் அமர்வாக சேலம் பெரியார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கணிதத் துறை முனைவர் பிரகாஷ், வகை நுண்கணித சமன்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து மின்னியல் தகவல் ஒளிபரப்பல் மூலம் மாணவியருக்கு விளக்கினார். இரண்டாம் அமர்வாக கேரளா மத்திய பல்கலைக்கழக கணிதத் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஞானவேல் செளந்தர்ராஐன் வகை நுண்கணித சமன்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் கணிதத்தின் பயன்கள் பற்றி எடுத்துக் கூறி, மின்னியல் தகவல் ஒளிபரப்பல் மூலம் விளக்கினார். பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட அனைத்து மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கணிதத் துறை உதவி பேராசிரியர் சசிகலா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT