கிருஷ்ணகிரி

நொகனூர் காட்டுக்கு 70 யானைகள் விரட்டியடிப்பு

DIN

தேன்கனிக்கோட்டை அருகே வட்ட வடிவு பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகளை வனத் துறையினர் நொகனூர் காட்டுக்கு புதன்கிழமை விரட்டினர்.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 70 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் நுழைந்துள்ளன.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வட்ட வடிவு பாறை பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள இந்த 70 யானைகள் லக்கசந்திரம், பேவநத்தம், பாலேகுளி, மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், கலகோபசந்திரம், ஜார்கலட்டி, மாரசந்திரம் ஆகிய பகுதியில் ராகி, அவரை, துவரை, சோளம், தக்காளி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 50 பேர் கொண்ட குழுவினர் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை வட்ட வடிவு பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகளை விடிய, விடிய பட்டாசுகள் வெடித்தும், மேளத் தாளங்களை அடித்தும் ஆலல்லி காட்டுக்குள் விரட்டினர்.
தொடர்ந்து நொகனூர் காட்டு வழியாக கர்நாடக வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டாக வனத் துறையினர் தெரிவித்தனர். புதன்கிழமை இந்த யானைகள் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT