கிருஷ்ணகிரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

DIN

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் காப்பாற்ற முற்படாத தமிழக அரசைக் கண்டித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாட்டாளி மக்கள் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் சா. பெ. வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் இரா. செந்தில், பாரிமோகன், மாவட்டச் செயலர்கள் சண்முகம், இமயவரம்பன், மாநில துணைத் தலைவர்கள் அரசாங்கம், பாடி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, மாநில இளைஞரணிச் செயலர் முருகசாமி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களைக் காப்பாற்றவும், இப்போது வரை வீடு திரும்பாத மீனவர்களைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசைக் கண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரியில்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பாமக சார்பில் கிருஷ்ணகிரி புறகநகர்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் மாநில தேர்தல் பணிக் குழுத் தலைவர் புதா.அருள்மொழி தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், துணைத் தலைவர் மேகநாதன், மாவட்டச் செயலாளர்கள் அர்சுணன், ஆறுமுகம், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் காக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT