கிருஷ்ணகிரி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்

தினமணி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து வியாழக்கிழமையும் ஓசூரில் போராட்டங்கள் நடைபெற்றன.
 ஒசூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தொடங்கிய போராட்டம், அன்று இரவும் தொடர்ந்து வியாழக்கிழமை விடிய, விடிய நடந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது நாள் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பிற மொழிகள் பேசக்கூடிய மக்களும், ஒசூரில் வசிக்க கூடிய வட மாநில இளைஞர்களும் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக, ஒசூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரிகளின் மாணவர்கள், ஊர்வலமாக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 இதே போல் ஒசூரில் தளி சாலையில் உள்ள நரேந்திரா நம்பிக்கை நட்சத்திரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதே போல தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒசூரில் வழக்குரைகள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூளகிரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சூளகிரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
 ஊத்தங்கரையில்
 ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர் அமைப்புகள், தன்னார்வ ஆர்வலர்கள், பொதுமக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 இதில் காளை மாட்டுடன் வந்து அமர்ந்தும், தமிழர்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் மாணவர்கள் சிலம்பாட்டம் ஆடியும், பறை இசை முழக்கத்தோடும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு ஊத்தங்கரை டி.எஸ்.பி. அர்சுனன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT