கிருஷ்ணகிரி

ஜிஎஸ்டி அமல்படுத்தாததால் ஒசூரில் 30 சதவீதம் பெட்ரோல், டீசல் விற்பனை குறைவு

DIN

ஜிஎஸ்டி அமல்படுத்தாததால் ஒசூரில் பெட்ரோல், டீசல் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.
 ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டதால், மாநிலங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன.  இதனால் கர்நாடக மாநில அரசு பெட்ரோல்,  டீசலுக்கு நுழைவு வரியான 5 சதவீதத்தை ரத்து செய்தது.
 இதனால், பெட்ரோல் விலை தமிழகத்தைக் காட்டிலும் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.3 குறைவு.
  ஒசூரில் இருந்து கர்நாடக மாநிலம்,  அத்திப்பள்ளிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுதான் உள்ளது.  இதனால், ஒசூர் மற்றும் தமிழக எல்லையோரப் பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளுக்கு தேவையான டீசல் மற்றும் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை அத்திப்பள்ளிக்குச் சென்று நிரப்பி வருகின்றனர்.  
 இதனால் ஒசூரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில்  30 முதல் 40 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாக பாரத் பெட்ரோலிய முகவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.பி வெங்கடேஷ் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறியது:  இதுவரை கர்நாடக மாநிலத்தை விட தமிழகத்தில் பெட்ரோலியப் பொருள்களுக்கு வரி குறைவாக இருந்தது.  இதனால் கர்நாடக மாநில வாகனங்கள் ஒசூரில் வந்து பெட்ரோலியப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.  தமிழக அரசு 5.3.2017-இல் பெட்ரோலியப் பொருள்களுக்கு விற்பனை வரியை 27 சதவீதமாக இருந்ததை 34 சதவீதமாக உயர்த்தியது. மேலும்,  அனைத்து மாநில சோதனைச் சாவடிகளும் கடந்த வாரம் அகற்றப்பட்டதால்,  கர்நாடக அரசு நுழைவு வரி 5 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் தமிழகத்தை விட பெட்ரோலுக்கு ரூ.2.90, டீசலுக்கு ரூ3.60 குறைவு.
எனவே,  தமிழக வாகனங்கள் கர்நாடக மாநிலத்துக்குச் சென்று வாங்கி வருகின்றனர். இதனால் ஒசூரில் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை குறைந்துள்ளது.
 எனவே, பெட்ரோலியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி  வரி விதிக்க வேண்டும்.  ஒரு நாளைக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதால்,  தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத் பெட்ரோலிய முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT