கிருஷ்ணகிரி

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

தினமணி

போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி கிராமத்தில் கிணற்றில் விழுந்த புள்ளிமான் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.
 போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் குணசேகரன்(45). இவர், அப்பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் புதிதாக கிணறு வெட்டி வருகிறார்.
 இதற்காக கிணற்றில் ராட்சத கிரேன் அமைத்து 50 அடிக்கும் மேல் கிணறு தோண்டி மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வனத்திலிருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான், வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த ஆள்களை பார்த்து மிரண்டு ஓடியதில் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
 தகவல் அறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று உயிருக்குப் போராடிய மானை மீட்டனர். பிறகு கல்லாவி பிரிவு வன அலுவலர் துரைகண்ணுவிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT