கிருஷ்ணகிரி

உரிமம் இன்றி செயல்படும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர்

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்ளாட்சி அமைப்புகள் உணவகங்களுக்கு அளித்து வந்த உரிமங்களை தற்போது உணவுப் பாதுகாப்புத் துறை வழங்கி வருகிறது. ஏற்கெனவே உணவகம் நடத்தும் உரிமையாளர்களுக்கு உரிமம் பெறுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது உரிமம் பெறாத உரிமையாளர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு அல்லது உரிமம் பெறலாம். உரிமம் பெறாத உணவக உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவக உரிமம் பெறவது உரிமையாளரின் கடமையாகும்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரம் உணவு வணிகர்கள் உள்ளனர். இதில் உணவுப் பொருள்கள் வியாபாரம் செய்ய 802 உரிமமும், 6,854 பதிவு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 61 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தரக்குறைவான உணவு விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடமிருந்து ரூ.3,39,750 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. உணவு ப்பொருள்கள் மீதான புகார்களை 9444042322 என்ற (வாட்ஸ் அப்) எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT