முகப்பு
கிருஷ்ணகிரி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் தாமதமாக வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைப் பிரிவுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் தாமதமாக வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய காவல் ஆய்வாளர் ஆயுதப்படைப் பிரிவுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப்  பணிபுரிபவர் இரா. ஆண்டவர்.  அதே காவல் நிலையத்தில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் பார்த்திபன்,  புதன்கிழமை காலை 9. 20 மணிக்கு வந்துள்ளார்.
அப்போது காவல் ஆய்வாளர் இரா. ஆண்டவர் 7.30 மணிக்கு வரவேண்டிய நீங்கள் இவ்வளவு நேரம்  தாமதமாகவா வருவது? எனக் கேட்டதாகவும், அதில் இருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ஆவேசத்தில் பார்த்திபனை காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதை எதிர்பார்க்காத பார்த்திபனும் காவல் ஆய்வாளரைத் திருப்பித் தாக்கியுள்ளார். இதையடுத்து,  இருவரும் மத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்ததும்  ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ச்சுனன் இருவரிடமும் விசாரணை நடத்தி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார்,  காவல் ஆய்வாளர் இரா.ஆண்டவரை ஆயுதப்படைப் பிரிவுக்கு தாற்காலிகமாக மாற்றி உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →