கிருஷ்ணகிரி

ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்

DIN

ஒசூர் அருகே ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூர் அருகே பத்தலப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமி திருக்கோயிலில்48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. இறுதி நாளான திங்கள்கிழமை திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீ ஹனுமந்தராயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும், சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹாமங்களாரத்தி நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலையில் திருக்கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது. இதில், வேத சாஸ்திரம், இந்து தர்ம பந்ததிகளின்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  
இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.  அலங்கரிக்கப்பட்ட உற்வச மூர்த்திகளின் பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT