கிருஷ்ணகிரி

பாம்பாறு அணை அருகே சேதமடைந்த புதிய தரைப்பாலம்

DIN

ஊத்தங்கரை அருகே பாம்பாறு ஆற்றின் குறுக்கே இரு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் பிளந்து சேதமடைந்துள்ளது.
ஊத்தங்கரை அருகே பாம்பாறு ஆற்றின் குறுக்கே பழைமையான மேம்பாலம் உள்ளது. திண்டிவனம் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தப் பாலம் கர்நாடகம்,  புதுவை சாலை வழியாகச் செல்லும் பிரதான சாலையாகும். இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. 85 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலம் வலுவிழந்ததால் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சுமார் 20 கி. மீ. சுற்றிச் செல்கின்றன. இதற்கு மாற்றாக பாம்பாற்றின் குறுக்கே பல லட்சம் மதிப்பில் உடனடியாக தரைப்பாலம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த புதிய தரைப்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வந்தன. பழைய மேம்பாலத்தில் விரிசலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பாம்பாற்று உபரிநீர் தரைப்பாலம் வழியாகச் செல்லும் வகையில்சிமென்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு சாலையின் இருபுறத்திலும் கருங்கற்கள் தடுப்பும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்  திங்கள்கிழமை இரவு பாம்பாறு அணை மதகுகளின் வழியாக வெளியேறிய உபரி நீர் காரணமாக இந்த தரைப்பாலத்தில் இருந்த சிமென்ட் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன. தடுப்பிற்காக போடப்பட்டிருந்த கருங்கற்களும் பெயர்ந்தன. இதனால் தார்ச்சாலையின் இருபுறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் பிளந்து சேதமடைந்தது. இதையடுத்து இந்த தரைப்பாலத்தின் வழியாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பழைய மேம்பாலம் வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. கட்டிமுடிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே தரைப்பாலம் சேதமடைந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே வலுவிழந்த மேம்பாலம் வழியாக தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன. பாம்பாறு அணை நிரம்பி வழிகிறது. உபரி நீர் திறக்கப்பட்டால் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் அடித்துச் செல்லும் நிலையில் உள்ளது.  தரைப்பாலம் சேதமடைந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT