கிருஷ்ணகிரி

ஆள் கடத்தலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

DIN

ஒசூரில் ஆள் கடத்தலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ஒசூர் உதவி அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
ஒசூர் சிப்காட் அவுசிங் காலனியைச் சேர்ந்தவர் சிவதாசன். இவர், தொழிற்சாலைகளுக்கு காவலர்களை நியமித்து அதற்குரிய சேவையை செய்து வந்தார். இவர் கடந்த 22.5.2011ல் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரை கடத்திச் சென்றதாக ஒசூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு ஒசூர் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை, நீதிபதி ராமகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினார்.  அதில்,  முருகனை கடத்திச் சென்றது, மோசடி செய்ததற்காக சிவதாசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக ஜீவானந்தம் வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT