கிருஷ்ணகிரி

பேரிடர் மேலாண்மை: துணை ஆட்சியர் ஆய்வு

தினமணி

போச்சம்பள்ளி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரி மதகுகளை துணை ஆட்சியர் தலைமையிலான குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
 வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், துணை ஆட்சியர் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் ஐயப்பன் தலைமையில், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி ஜம்பு ஏரி கரையின் மீது சாய்ந்து விழும் நிலையில் இருந்த பனை மரத்தை பார்வையிட்டு, அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஏரி கால்வாய்களில் மதகுகள் மற்றும் கரைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மத்தூர் அருகிலுள்ள பெனுகொண்டாபுரம் ஏரியையும் ஆய்வு செய்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT