கிருஷ்ணகிரி

நீட் தேர்வு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

DIN

தருமபுரியில் நீட் தேர்வுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டனர்.
முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணை அமைப்பாளர் ஜெ.எம்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் த.ஜெயந்தி தொடக்கிவைத்தார், மண்டலச் செயலர் பொ.மு.நந்தன் நிறைவுரையாற்றினார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் சாதிக், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தின் போது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்; கல்வி, மாநில பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சின் மாவட்டச் செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். அக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் கழகத்தின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் இந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும. உயிரிழந்த அனிதாவுக்கு நீதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றோர் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT