தலைக்கவசம் அணிய விழிப்புணர்வுப் பேரணி
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஒசூரில் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது .
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஒசூரில் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது .
பாகலூர் சாலையில் பேரணியை அட்கோ காவல் ஆய்வாளர் பெரியசாமி தொடக்கிவைத்தார். முக்கிய சாலைகள், வீதிகள் வழியாகச் சென்ற பேரணி நல்லூர் சோதனைச் சாவடி அருகே நிறைவடைந்தது.
இதையடுத்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வில்லைகள் ஓட்டப்பட்டன. மேலும், வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து அளித்து போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காவல் உதவி ஆய்வாளர் சரவணன், கணேஷ்பாபு, சரண்யா, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.