முகப்பு
கிருஷ்ணகிரி

மினி டெம்போ திருட்டு 

அரசம்பட்டியில் கடையின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

அரசம்பட்டியில் கடையின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியைச் சேர்ந்த கோபால் மகன் தணிகாசலம் (46),  சிமென்ட்,  கம்பிகள் விற்பனை செய்யும் கடையை நடத்திவருகிறார். 
இவர் வழக்கம்போல் தனது கடையை மூடிவிட்டு,  டெம்போவை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.  மீண்டும் காலை கடைக்கு வந்தபோது,  டெம்போவை காணவில்லை.
புகாரின்பேரில் பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் கு.கபிலன் வழக்குப் பதிந்து,  திருடு போன கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →