உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
தேன்கனிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது. மாநில அரசியலில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். பாஜகவும் மாற்றத்திற்கு தயாராகிவருகிறது. மொழி அரசியல் நடைபெறும் தமிழகத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தவில்லை. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஏழை மக்களுக்காக சிறந்த திட்டமாக மருத்துவக் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுவது அவரது சொந்தக் கருத்து. அரசியல் களத்துக்கு நடிகர்கள் வந்த பிறகே எனது கருத்தை தெரிவிப்பேன். காவிரியிலிருந்து தண்ணீர் பெற்றுத் தர தமிழக பாஜக முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.
கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தளி தொகுதி பொறுப்பாளர் நாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் முனிராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ், நகர தலைவர் பார்த்திபன், மாவட்ட பொதுச் செயலாளர் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழிசை செளந்தரராஜனுக்கு ஒசூரில் மாவட்ட செயலாளர் ராஜி, பாஜக ஒசூர் நகரத் தலைவர் சங்கர், நகர பொதுச் செயலாளர்கள் கிரிஷ், தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் போத்திராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.