சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறுத்தல்
போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரிசேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறுத்தல்
போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மையத்தில் 2 முதல் 5 வயது வரையிலான 20 குழந்தைகள் படித்து வந்தனர். தற்போது கட்டடத்தின் மேற்கூரை, கதவு ஜன்னல் உடைந்து பழுதானதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள இக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குடிநீர் வசதி இல்லாததால் மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக நீண்ட தொலைவு சென்று பணியாளர்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அங்கன்வாடி மையம் அருகே செடிகள் முளைத்து மரம்போல் வளர்ந்து கிடக்கிறது.
எனவே, பழையக் கட்டடத்தை அகற்றி அங்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.