கிருஷ்ணகிரி

பெரியாண்டவர் கோயிலில் முப்பெரும் பூஜை

DIN

போச்சம்பள்ளி வட்டம், பாப்பானூரில் உள்ள பெரியாண்டவர்,  முனியப்ப சுவாமி கோயிலில் 2-ஆம் ஆண்டு முப்பெரும் பூஜை  நடைபெற்றது . 
பாரூர் பெருமாள் கோயிலில் பால் கொம்பு நடப்பட்டு, பொங்கல் வைத்து பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோயில் முன் மேல்தீபம் ஏற்றப்பட்டது. 2-ஆம் நாள் பாப்பானூரில் உள்ள முனியப்பன், பெரியாண்டவர் சுவாமிக்கு முப்பெரும் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.  பன்றி, கோழி, ஆடுகள் பலியிட்டு முப்பெரும் பூஜை  நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முருகன், சூரியகணேஷ், சங்கர், பாஸ்கர், அண்ணாதுரை மற்றும் 12 கிராம மக்கள்  செய்து இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT