கிருஷ்ணகிரியில் நீச்சல் பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரியில் ஏப்ரல் 1 முதல் மே 30-ஆம் தேதி வரை நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் ஏப்ரல் 1 முதல் மே 30-ஆம் தேதி வரை நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்டமாக ஏப்ரல் 1 முதல் 15-ஆம் தேதி வரை 15 நாள்களும், இரண்டாம்கட்டமாக ஏப்ரல் 16 முதல் 30-ஆம் தேதி வரையிலும், மூன்றாம்கட்டமாக மே 1 முதல் 15-ஆம் தேதி வரையிலும், நான்காம்கட்டமாக 16 முதல் 30-ஆம் தேதி வரையில் என மொத்தம் நான்கு கட்டமாக 2 மாதங்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்று, நீச்சல் கற்றுக் கொள்ள பயிற்சிக் கட்டணமாக ரூ.1,200 வசூலிக்கப்படுகிறது. எனவே, பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பயிற்சிக் கட்டணத்துக்கான விண்ணப்பத்தை நீச்சல் குளத்தில் பெற்று, கட்டணத் தொகையை செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 8270399940 என்ற எண்ணிலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி 04343-225377 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். நீச்சல் தெரிந்த நபர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.