ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ. வரை செல்லும் ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்கை பற்றி...
ஒரேயொரு முறை சார்ஜ் ஏற்றினால் 180 கி.மீ. வரை செல்லும் வகையிலான எட்டு ஆண்டுகள் உத்தரவாதத்துடன் ஓபன் ரோர் ஈவோ எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு மின்சார மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் புதிய ரோர் ஈவோவை முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 99,999 என்ற சிறப்பு அறிமுக விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்றாடப் பயன்பாட்டிற்காக இந்த மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
ரோர் ஈவோ மணிக்கு 110 கி.மீ. என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், 180 கி.மீ. தூரம் வரை செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஓபன் பிளக் மூலமாக வெறும் 90 நிமிஷங்களில் 0-80 சதவிகிதம் வரை வேகமாக சார்ஜ் செய்யும் திறனையும் பெற்றுள்ளது. ஓட்டுபவரின் மனநிலைக்கு ஏற்ப செயல்படும் வகையில், ஸ்மார்ட் ஐக்யூ செய்யறிவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ரோர் ஈவோவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 3.4 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான லித்தியம் அயான் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது 50 சதவிகித அதிக வெப்பத்தைத் தடுத்து 2 மடங்கு அதிகமான ஆயுள்காலத்தையும் பெற்றுள்ளது.
இருக்கைக்கு கீழே சார்ஜிங் போட்டுக்கொள்ள வசதியாக இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகளும், தேவையான பொருள்களை வைத்துக்கொள்ள 10 லிட்டர் இடமும் உள்ளது. ரோர் ஈவோ, பல்ஸ் ரெட், நியூட்ரான் ப்ளூ, மேக்னடிக் பிளாக் மற்றும் ஃபோட்டான் ஒயிட் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த பைக்கானது முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 99,999 என்ற எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலையில் கிடைக்கிறது. அதன் பிறகு இதன் விலை ரூ. 1,24,999 என்ற எக்ஸ்-ஷோரூம் ஆக இருக்கும் என்றும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் ரூ. 777 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும், இதன் விற்பனை ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என்று நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Oben Electric, one of India's leading homegrown electric motorcycle manufacturer has launched the all-new Rorr EVO at a special introductory price of Rs 99,999 (ex-showroom) for the first 10,000 customers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.