FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சீனா ஓபன் பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா வெற்றி!

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி கண்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 6:44 am IST
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து - கோப்புப் படம்
பகிர்:

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி கண்டனா்.

மகளிா் ஒற்றையரில், அண்மையில் ஜப்பான் ஓபன் சாம்பியனான பி.வி.சிந்து 21-14, 9-21, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான உன்னட்டி ஹூடாவை போராடி வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-17, 5-21, 21-17 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானை வெல்ல, லக்ஷயா சென் 22-20, 15-21, 21-14 என, ஜப்பானின் யுஷி டனாகாவை தோற்கடித்தாா்.

Advertisement

Advertisement

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் ஜோடி 16-21, 7-21 என்ற வகையில், சீனாவின் லியாங் வெய் கெங்/வாங் சாங் இணையிடம் தோல்வியுற்றது.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 9-21, 16-21 என்ற கேம்களில், சீனாவின் ஃபெங் யான் ஜி/ஹுவாங் டாங் பிங் கூட்டணியிடம் தோற்றது. துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 18-21, 18-21 என, சீனாவின் குவோ ஜின் வா/சென் ஃபாங் ஹுய் இணையிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments