ஆயுஷ் ஷெட்டி அதிர்ச்சி தோல்வி..! இந்தியாவின் சாம்பியன் கனவைத் தகர்த்த இந்தோனேஷிய வீரர்!
இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்பாக தோல்வியுற்றது குறித்து...
இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்பான சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா தனது சொந்த மண்ணில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியும் இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானும் மோதினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 19-21, 11-21 என நேர் கேம்களில் தோல்வியுற்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
முதல் சுற்றில் உலகின் நம்.1 வீரரை வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி உலக சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற நம்பிக்கையை விதைத்திருந்தார். ஆனால், இந்தக் கனவை இந்தோனேஷிய வீரர் தகர்த்திருக்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இருக்கும் பிவி சிந்து, இந்தியாவின் சாம்பியன் கனவை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Ayush Shetty shocking defet in round of 16 in BWF World Championships
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.