முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் அனந்த்குமார் மறைவுக்கு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஒசூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது .

Updated On : 13 நவம்பர், 2018 at 3:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஒசூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது .
ஒசூரில் பா.ஜ.க. சார்பில் காந்தி சிலை அருகே மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் எம்.நாகராஜ், தருமபுரி கோட்ட அமைப்புச் செயலாளர் சபரி, மாவட்டச் செயலாளர் ராஜி, வர்த்தக அணி கோட்டப் பொறுப்பாளர் ராமமூர்த்தி, இளைஞரணி நகரத் தலைவர் முருகன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் முனிராஜ், அம்மன் சுரேஷ், மல்லேஷ்ரெட்டி, மஞ்சு, புலிகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.