முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

கான் சிட்டி படத்தின் புரமோஷன் குறித்து...

Updated On : 16 ஏப்ரல் 2026, 11:39 am IST
அர்ஜுன் தாஸ், சான் ரோல்டன்
பகிர்:

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த திரைப்படத்தின் புரமோஷன் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

தமிழில் வளர்ந்துவரும் நாயகனாக அர்ஜுன் தாஸுக்கு இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றுக் கொடுத்தது.

தெலுங்கிலும் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து ஓஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, இவர் கதாநாயகனாக நடித்து முடித்த ஒன்ஸ் மோர் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

Advertisement

Advertisement

தற்போது, பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த திரைப்படத்திற்கு கான் சிட்டி எனப் பெயரிட்டுள்ளனர்.

இதனை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் மற்றும் சான் ரோல்டன் காரில் செல்லும்போது தேர்தல் பறக்கும் படையினரிடம் கட்டுக்கட்டாக பணம் வைத்து மாட்டிக்கொள்வது போல் புரமோஷன் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் அதனைச் சார்ந்தும், அதிக பணம் கொண்டு செல்ல வேண்டாம் என்கிற அறிவுரையுடன் தங்கள் படத்திற்கான புரமோஷனையும் செய்துள்ளனர். இது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

summary

The promotions for the film starring actor Arjun Das have garnered attention among fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.