கிருஷ்ணகிரி

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 482 பேருக்கு பணி நியமன ஆணை 

DIN

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 482 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. 
இதில் சேலம், கோவை, சென்னை, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களைச் சேர்ந்த 75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்தனர். இந்த முகாமில் 965 பணி நாடுநர்கள் பங்கேற்றனர். இதில் தகுதி வாய்ந்த 482 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்வில் மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT