கிருஷ்ணகிரி

காவிரி ஆற்றங்கரையில் சுற்றித்திரிந்த முதலை மீட்பு

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் சுற்றித்திரிந்த  ஆண் முதலையை வனத் துறையினர் மீட்டு,  ஒகேனக்கல் முதலைகள் மறுவாழ்வு  மையத்தில் விட்டனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  நீர்வரத்துக் குறைந்து வந்த நிலையில், தமிழ்நாடு தங்கும் விடுதி அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோரப் பகுதியான சிறுவர்  பூங்காவின் பின்பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவதாக  பொதுமக்கள் மூலம் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
இதுகுறித்து வனக்காவலர் அருணாசலம்,  வேட்டைத்தடுப்பு அலுவலர் மணிகண்டன், சிவா மற்றும் அனில் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று  9 அடி நீளம், 200 கிலோ எடை கொண்ட ஆண் முதலையை பிடித்து, ஒகேனக்கல் பகுதியில் உள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT