கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் ஜப்தி

DIN

கிருஷ்ணகிரியில் இழப்பீடு வழங்காததால், வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் நீதிமன்ற உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
 கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரின் மகள் அலமேலு. இவருக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் பரப்பளவு நிலம், தர்மராஜா கோயில் தெருவில் உள்ளது. இந்த நிலத்தில் அஞ்சல் நிலையம் அமைக்க 1982 ஆம் ஆண்டு, தமிழக அரசு கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்தத் தொகை, போதுமானதாக இல்லை எனக்கூறி, விசாலாட்சி சார்பில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூ.11,70,634 இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, விசாலாட்சி சார்பில் 2018ஆம் ஆண்டு நிறைவேற்றுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாகனம், கணினி உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
 இதையடுத்து, நீதிமன்ற பணியாளர்கள், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை மட்டும் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT