ஒசூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், எஸ்.ஏ.சத்யா. 
கிருஷ்ணகிரி

பெரியாா் சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியாரின் 46 -ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

தந்தை பெரியாரின் 46 -ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, ஒசூா் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், தி.க. சாா்பில் மாவட்டத் தலைவா் வனவேந்தன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில், மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவா் யுவராஜ், ஒசூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் மாதேஸ்வரன் மற்றும் தி.க. பொதுக்குழு உறுப்பினா் துக்காராம், மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாணவரணி தலைவா் வெற்றி, மகளிரணி அமைப்பாளா் கண்மணி மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT