முகப்பு
கிருஷ்ணகிரி

வேளாங்கண்ணி பள்ளியில் தீயணைப்பு ஒத்திகை

தேசிய தீயணைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்தில் சிக்கியவர்களை

Updated On : 23 ஜனவரி 2019, 9:38 am IST
பகிர்:

தேசிய தீயணைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்வு, கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பங்கேற்று,  தீ விபத்து ஏற்படாமல் இருக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தீ விபத்தில்  சிக்கியவர்களை மீட்க எவ்வாறு செயல்பட வேண்டும்,  மீட்டு  முதலுதவி அளிப்பது,  இடிபாடுகளில் சிக்கியவர்களை  மீட்பது உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்வை நிலைய அலுவலர்கள் ஜானகிராமன், ஆனந்தன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.