கிருஷ்ணகிரி

பார்வைக் குறையுள்ள குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சேர்க்க அழைப்பு

DIN

பார்வைத் திறன் குறையுள்ள குழந்தைகளை பர்கூரில் உள்ள சிறப்புப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து,  அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் அரசு நிதியுதவியுடன் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான  பார்வைத்  திறன் குறையுடைய மாணவர்களைக் கொண்டு உண்டு உறைவிட வசதியுடன் ஐஇஎல்சி  பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி பர்கூரில் செயல்பட்டு வருகிறது.  
இந்தப்  பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் பள்ளியில்  பயிலும் மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. எனவே, இந்தப் பள்ளியில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களைச் சேர்த்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT