கிருஷ்ணகிரி

பள்ளியில் வேலைவாய்ப்புப் பதிவு

DIN


பள்ளி அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை தாங்கள் பயின்ற பள்ளியிலே பதிவு செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:10, 12-ஆம் வகுப்பு பள்ளி அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலம் 2011-ஆம் ஆண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருகை புரியாது நேரடியாக இந்தத் துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, கால விரயம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் தவிர்க்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், கடந்த 10-ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதையொட்டி ஜூலை 24-ஆம் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பள்ளி கல்வித் துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ளஅனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். 
மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில்  பதிவு செய்யலாம். அல்லது, அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யும்போது, தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT